Ticker

6/recent/ticker-posts

Ad Code

நெல்லை ஸ்பெஷல் "இடி சாம்பார்"/ திருநெல்வேலி ஸ்டைல்ல இந்த பொங்கல அசத்துங்க! Jegathees meena

     இந்த இடி சாம்பார் பல காலமாக திருநெல்வேலி மட்டுமின்றி பல மாவட்டங்களில் சிறந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். இதை என் பாட்டி சொல்லி குடுத்த அந்த சுவை மற்றும் மணம் நிறைந்த பாணியில் நான் இன்று பகிர்ந்து கொள்கிறேன். பொங்கலுக்கு வித்தியாசமான முறையில் சாம்பார் செய்ய இந்த ரெசிபி முழுதும் பாருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

நெல்லை ஸ்பெஷல் "இடி சாம்பார்"




செய்முறை

1. பருப்பு வேக வைக்கவும்
  • 200 கிராம் பருப்பு வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள். வேகும் போதே 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணை சேர்த்து கொள்ளுங்கள்.
2. மசாலா தேவையான பொருட்கள்
  • 2 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 தேக்கரண்டி சீரகம், 15 காய்ந்த மிளகாய், மற்றும் 1/2 தேக்கரண்டி வெந்தயம் இவை அனைத்தயும் திரிக்க போகிறோம். இது தான் இடி சாம்பாருக்கு தனி சுவை சேர்க்கும்.
3. வறுக்கவும்
  • முதலில் எண்ணையில் மிளகு சீரகம் வறுத்து கொள்ளுங்கள். பின், கொத்தமல்லி மற்றும் கடலை பருப்பு சேர்த்து கொள்ளுங்கள். வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து அனைத்தயும் வறுத்து கொள்ளுங்கள். 
4. காய்கள்
  • சாம்பாருக்கு உங்களிடம் இருக்கும் காய்களை எடுத்து கொள்ளுங்கள். மூன்று வகை கிழங்குகள் சேர்த்தால் சாம்பாரின் சுவை அமோகமாக இருக்கும். 
  • காய்களை வெட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். 
5.  அரைக்கவும்
  • வதக்கிய மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, கடலை பருப்பு, வெந்தயம், தேங்காய் துறுகவல்கள் காய்ந்த மிளகாய் அனைத்தயும் அரைத்துக்கொள்ளுங்கள். 
6. சாம்பார் செய்ய ஆரம்பிக்கலாமா?
  • வெந்த பருப்பை கடைந்து கொள்ளுங்கள். 
  • சின்ன வெங்காயத்தை வேகும் காய்கறிகளுடன் சேர்க்கவும். பின், புளி கரைத்து சேர்த்து கொள்ளுங்கள். கடைந்த பருப்பை ஊற்றி கொள்ளுங்கள். வறுத்து, அரைத்த மசாலாவை சேர்க்கவும். தேங்காய் துறுவல் சேர்க்கவும். தண்ணீர் மேலும் தேவைப்பட்டால் சேர்க்கவும்.
  • சாம்பார் கொத்தித்தவுடன் சட்டியை இறக்கவும். கடுகு மற்றும் உலுந்தம் பருப்பு தாளித்து சாம்பாரில் சேர்க்கலாம். பின், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். 
இந்த ரெசிபிய செஞ்சா சாம்பார் பிடிக்காதவங்கலும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவை பிறருக்கும் பகிருங்கள்...நன்றி!

Ad Code