Ticker

6/recent/ticker-posts

Ad Code

இனி பாகற்காய் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டாங்க! பாகற்காய் இனி கசக்காது/ Jegathees meena

  இன்று கசப்பான பாகற்காயை கூட சுவைத்து குழந்தைகளை உண்ண வைக்க அருமையான ஒரு ரெசிபியை தான் பார்க்க போகிறோம். பாகற்காயில் பல நற்குணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். ஆனாலும் இதை சாப்பிட அனைவருக்கும் கசக்கும்...இன்று நாம் அந்த கசப்பு உணர்வை விரட்டி அடிப்போம்!

இனி பாகற்காய் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டாங்க


தேவையான பொருட்கள்:

  • பாகற்காய் - 1/2 கிலோ
  • தக்காளி - 3 எண்ணம்
  • வெங்காயம் - 2 எண்ணம்
  • வெந்தயம் - தேவையான அளவு
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • சீரகம் - 1/4 ஸ்பூன்
  • பூண்டு - 6 பல்
  • கார பொடி - 1 மேஜை கரண்டி
  • மஞ்சள் பொடி - தேவையான அளவு
  • கொத்தால்லி பொடி - 2 மேஜை கரண்டி
  • வெல்ல பாகு - 1 மேஜை கரண்டி
  • புளி - எலுமிச்கை அளவு
  • உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு
  • நல்லெண்ணை - 50 ml

செய்முறை:

Step 1:

     ஒரு கடாயில் எண்ணை சூடான பின் பொடியாக நறுக்கிய பாகற்காய் சேர்த்து கொள்ளுங்கள். நன்கு மூடி போடாமல் வதக்கவும்.

Step 2:

    இன்னொரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொரியவிட்டு, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை, பொடியாக  நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். 

Step 3:

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி, கார பொடி மற்றும் கொத்தமல்லி பொடி சேர்க்கவும். நல்ல வதக்கவும். நல்ல மசிந்தவுடன், வதக்கி வைத்திருந்த பாகற்காயை சேர்க்கவும்

Step 4:

    மூன்று நிமிடம் அனைத்தயும் சேர்த்து வதக்கினால் போதுமானது. எலுமிச்சை அளவு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் கொதித்தவுடன் வெல்ல பாகு சேர்த்து கொள்ளுங்கள்

Step 5:

    பெருங்காயம் தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். குறைந்த சூட்டில் நல்ல வேக விடுங்கள். சுவையான பாகற்காய் தொக்கு தயார்👍


Ad Code