Ticker

6/recent/ticker-posts

Ad Code

பிக் பாஸ் 7 வெற்றியாளர் இவராக தான் இருக்கும்/ கமல் மீதான வெறுப்பு/ Jegathees meena

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். எப்பொழுதும் போட்டியளர்களுக்கு ரசிகர்கள் இருப்பதும், அவர்கள் வெற்றி பெற சமூக வலைதளங்களில் புகழ்ச்சி மழை பொழிவதும் வழக்கம். இம்முறையும் போட்டியாளர்கள் பலருக்கும் ஆதரவு கூடி கொண்டேவும் குறைந்து கொண்டேவும் வருகிறது

பிக் பாஸ் 7 வெற்றியாளர் இவராக தான் இருக்கும்


    பிக் பாஸில் மிகவும் பிரபலமாக மக்கள் ஆதரவை பெற்று வரும் போட்டியாளரை வெளியேற்றுவது வழக்கம். முதல் சீசனில் ஓவியா, மூன்றாம் சீசனில் கவின் நடப்பு சீசனில் ப்ரதீப் என பிக் பாஸில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் இருந்திருந்தால் அவரை பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளராக கணிக்கலாம். 

    எல்லா சீசனிலும் போட்டியளர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் முதல் முறையாக இந்த சீசனில் கமல் ஹாசன் மீதே மக்கள் கோபத்தில் உள்ளனர். அவர் ப்ரதீபிற்கு ரெட் கார்ட் குடுத்தது முதல் மாயா, பூர்ணிமா, மற்றும் நிக்செனுக்கு ஆதரவு தருவதை மறைமுகமாக பல இடங்களில் வெளி காட்டியுள்ளார். 

    ப்ரதீப் வெளியேரிய பின்னர், பலர் மீது வெற்றி காற்று வீச தொடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக வைல்ட் கார்ட் வழியாக வந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ச்சியாக பல வாரங்களில் மக்கள் வாக்கு நமக்கு நிரூபித்து கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு போட்டியாளர்களுக்கும் அவ்வப்போது செல்வாக்கு குறைந்தாலும், இவர்கள் மற்ற போட்டியாளர்கள் காட்டிலும் சிறப்பாக விளையாடுவதாக தெரிகிறது. 

    இருப்பினும் பல சீசங்களில் நாம் எதிர்பாரதவர்கள் தான் வந்தார்கள். ஆரவ், ரித்விகா, முகென் என இந்த மூன்று பேரும் முதலில் பெரும் செல்வாக்கு இல்லாதவர்களே. ஆனால் ஆரி, ராஜு, மற்றும் அஸீம் நல்ல செல்வாக்கை மக்களிடம் பெற்றவர்கள். அதனால் இந்த சீசனில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். "எதிர்பாராததை எதிர்பாருங்கள்"...

    

    

Ad Code