தினமும் தோசை செய்து கொடுத்தால் எங்கிருந்து சத்து கிடைக்கும் குழந்தைகளுக்கு? காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஹெல்தியான தோசை செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு சத்தும் நிறைந்து இருக்கும்.
இன்று ஆறு விதமான சத்துள்ள தோசை வகைகளை பார்க்கலாம். இவை அனைத்தும் மிகவும் சுலபமாக வீட்டில் செய்து கொடுக்ககூடியவை.
பீட்ரூட் தோசை:
- 1/2 கிலோ மாவிற்கு 200 கிராம் பீட்ரூட் சரியாக இருக்கும். பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி அதை தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
- துண்டுகள் இல்லாமல் அரைத்தவுடன் மாவில் கலக்கவும்.
- தோசை கல்லில் மாவை ஊற்றவும். நெய் மற்றும் எண்ணை ஊற்றி கொள்ளுங்கள்.
- இரு பக்கமும் நல்ல மொறு மொறுப்பாக வந்தவுடன் தட்டில் வைத்து பரிமாருங்கள்.
- நீங்கள் விருப்பப்பட்டால் வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்தால் இன்னும் சத்துள்ளதாக இருக்கும்.
மசாலா முட்டை தோசை:
- 1 மேஜைக்கரண்டி எண்ணை ஊற்றி அதில் சீரகம், கறிவேப்பிலை, 3/4 கப் வெங்காயம், 1/4 கப் தக்காளி, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- தேவையான அளவு உப்பு, 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 3/2 தேக்கரண்டி மிளகாய் பொடி சேர்த்து கிண்டவும்.
- 4 முட்டையை உடைத்து ஊற்றுங்கள். ஒரு நிமிடத்திற்கு கிளறுங்கள்
- தோசை ஊற்றி அதற்கு மேல் இந்த முட்டை பொடிமாஸை தூவி விடுங்கள்.
- இரண்டு பக்கமும் வெந்தவுடன் சட்னியுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- நீங்கள் விருப்பப்பட்டால் வெங்காயம், கொத்தமல்லி மேலே தூவி விடலாம்.
கறிவேப்பிலை தோசை:
- 2 கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை எடுத்து கொள்ளுங்கள். 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி, 4 சின்ன வெங்காயம், 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் எடுத்து கொள்ளுங்கள்.
- இதை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- பின் அதை 1/2 கிலோ மாவில் கலக்கி தோசை சுடுங்கள்.
- பிரமாதமான, சத்தான கறிவேப்பிலை தோசை தயார்.
- இதை நீங்கள் தக்காளி சட்னியோடு பரிமாரலாம்
கபேஜ் தோசை:
- 1 கப் அரிசி, 2 மேஜைகரண்டி உழுந்தம் பருப்பு, 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தண்ணீரில் அலசி பின் வடிகட்டி கொள்ளுங்கள்.
- இப்பொழுது 10 காய்ந்த மிளகாய் சேர்த்து 5 மணி நேரம் ஊற வையுங்கள்.
- ஊற வைத்த மிளகாயை மட்டும் எடுத்து 1 கப் தேங்காய், 2 மேஜைகரண்டி கொத்தமல்லி விதை, 1 மேஜைகரண்டி சீரகம், 1/4 கப் வெல்லம் சேர்த்து 3 மேஜைகரண்டி புளி தண்ணீர், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- ஊற வைத்த அரிசி, உளுந்தை தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள். அரைத்த மாவை அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது 3 கப் கபேஜ் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கிண்டுங்கள்.
- இந்த மாவை கொண்டு தோசை ஊற்றுங்கள். சுவையான கபேஜ் தோசை தயார்.
- இதற்கு தேங்காய் சட்னி நல்ல சைட் டிஷ்.
வெஜிடபுள் தோசை:
- 1 கரண்டி தோசை ஊற்றி அதன் மேல் கேரட், வெங்காயம், கபேஜ், பீட்ரூட், கொத்தமல்லி, முந்திரி பருப்பு, மிளகாய் பொடி ஆகியவற்றை தூவி விடவும்
- பின் தோசையின் மேல் நெய் ஊற்றி முறுகியவுடன் திருப்பி போட்டு, வெந்தவுடன் தோசையை தட்டில் வைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள்.
பூண்டு தோசை:
- 1 வெங்காயம், 20 பல் பூண்டு, 10 சிகப்பு மிளகாய், 1 தக்காளி, 1/2 கப் சீரகம், தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
- கடாயில் 1 மேஜைகரண்டி எண்ணை சேர்த்து அதில் 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, 1/2 தேக்கரண்டி , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அரைத்த விழுதை எண்ணையில் சேர்த்து2 நிமிடங்கள் கிண்டவும்
- தோசை மாவை ஊற்றி அதன் மேல் பூண்டு மசாலாவை பரப்பி வெந்தவுடன் எடுத்து விடவும்
- இந்த தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இந்த ஆறு வகை தோசைகளை வீட்டில் செய்து பாருங்கள். இந்த தோசை வகைகள் சத்துள்ளதாகவும் சுவையாகவும் இருக்கும். இன்னும் பல அற்புதமான ரெசிபியுடன் நான் வருகிறேன். உங்களுக்கு எதாவது ரெசிபி வேண்டும் என்றால் கம்மன்ட் செய்யுங்கள்.